தலைப்பு: கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து முற்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு (IPC)
Offered By: OpenWHO
Course Description
Overview
இக்கற்கை நெறியானது எந்த வகையான அமைப்புகள் புதிய கொரோனா போன்ற வெளிப்பட்டு வரும் சுவாச வைரசுகள் தொடர்பாக செயற்படுவதற்கு முன் ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாகவும், நோய்த்தொற்று ஏற்பட்டதன் பின்னர் அதனை எவ்வாறு இனங்காண்பது மற்றும் சுகாதார ஊழியர்களிற்கு/ நோயாளிகளுக்கு அல்லது சுகாதாரத்துறையுடன் தொடர்புபட்ட ஏனையவர்களிற்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறு IPC முறைகளினைப் பயன்படுத்துதல் வேண்டும் என்பன தொடர்பாகவும் விளக்கம் அளிக்கின்றது.
இக் கற்கை நெறியானது கிருமித் தொற்றில் இருந்து முற்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றினை நோக்காகக் கொண்டிருப்பதனால், இக்கற்கை நெறியானது சுகாதார சேவை பணியாளர்களிற்காகவும், பொதுச் சுகாதார சேவையாளர்களிற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2020 முதல் இந்தப் பாடநெறி புதுப்பிக்கப்படவில்லை. மிகச் சமீபத்திய வழிகாட்டுதலுக்கு, பாடத்தின் ஆங்கிலப் பதிப்பைப் பார்க்கவும்.
Syllabus
இந்த பாடநெறி பின்வரும் மொழிகளிலும் கிடைக்கிறது:
English - русский - 日本語 - français - Bahasa Indonesia - Español - Português - Italiano - српски језик - 中文 - македонски јазик - Türkçe - język polski - Tiếng Việt - العربية - Nederlands - Tetun - বাংলা - فارسي - Soomaaliga - සිංහල - Казақ тілі - ภาษาไทย
கண்ணோட்டம்:
இக் கற்கை நெறியானது கிருமித் தொற்றிலிருந்து முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு என்னும் தொனிப்பொருளுடன் பின்வருவனவற்றை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.:
- தீவிர நோய் பரம்பலிற்க்கு முகம் கொடுப்பதற்கு ஏற்றவாறு ஆயத்த நிலையில் மற்றும் தயார் நிலையில் இருத்தல் - கொவிட் 19 போன்றவற்றிற்கு..
- உலக சுகாதார நிறுவனத்தின் IPC தொடர்பான பரிந்துரைகளிற்கு ஏற்ப மனிதரில் இருந்து மனிதரிற்கு நோய் பரம்புதலினை மட்டுப்படுத்துதல்.
- சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களினை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலும், அறிக்கையிடலும்.
உங்களுக்கு உதவும் முகமாக ஒவ்வொரு மொடியூலிலும் அவசியமான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் இத்தலைப்பில் மேலதிகமாக கற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
கற்றலின் நோக்கங்கள்:
இப் பாடநெறியின் இறுதியில் நீங்கள் பின்வரும் விடயங்களில் தேர்ச்சி பெற்று இருப்பீர்கள்.
- கிருமித் தொற்றினை வருமுன் காத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (IPC) தொடர்பாக வரையறுத்தல் மற்றும் IPC தொடர்பாக முன் ஆயத்தப்படுத்துதல், தயார் நிலையில் இருத்தல் மற்றும் பதில் அளித்தல் நடவடிக்கைகள் தொடர்பாக வரையறுத்தல்;
- தற்போதைய கொவிட் 19 தொடர்பான தொற்றுநோயியல் நிலவரம் தொடர்பாக விவரிக்கக் கூடியதாக இருத்தலுடன் நோய் வரைவிலக்கணம் மற்றும் நோய் அறிகுறிகள் தொடர்பாகவும் விபரித்தல்;
- நிர்வாகக் கட்டுப்பாடு, நோய் ஊற்றினது கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் பொறியியல் கட்டுப்பாடு என்பன தொடர்பாக விபரித்தல்;
- Covid-19 சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவரினைக் கையாளும் போது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளிற்கு ஏற்ப கிருமித் தொற்றிற்கான முற்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு(IPC) நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார நிறுவனம் ஒன்றிற்கு விபரித்தல்;
- பொதுவான ஆயத்த நிலையின் போது, எவ்வகையான மேலதிகமான கிருமித் தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளினை சுகாதார நிறுவனம் ஒன்றில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக விபரித்தல்.
கற்கை நெறிக்கான காலம்: ஏறத்தாழ ஒரு மணித்தியாலம்.
சான்றிதழ்கள்: இப்பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்வதற்கு ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் எடுக்கும். இப்பயிற்சி நெறியில் பங்குபற்றியமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் இப்பயிற்சி நெறியினை 100% பூர்த்தி செய்தவர்களுக்கு வழங்கப்படும்.
இக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்ததன் பின்னர் COVID19 இன் போது எவ்வாறு தனிநபர் பாதுகாப்பு அணிகலன்களை அணிவது மற்றும் களைவது என்பன தொடர்பாக அறிவதற்கு ஆர்வமாய் இருப்பீர்கள். எனவே தயவுடன் Open WHO இன் COVID19: How to put on and remove Personal protective equipment (PPE) எனும் கற்கை நெறியினை பின்வரும் இணைப்பின் ஊடாக அணுகவும்; http://openwho.org?courses/COVID-19-IPC-EN
நீங்கள் கரங்களின் சுகாதாரத்தினை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக அறிவதற்கு ஆர்வம் கொண்டிருந்தால் தயவுடன் Open WHO இன் பின்வரும் இணைப்பின் ஊடாக இக் கற்கை நெறியினைப் பெற்றுக்கொள்ளலாம் : http://openwho.org?courses/COVID-19-IPC-EN
ஆங்கிலத்திலிருந்து இவ் ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையாகும்: Infection Prevention and Control (IPC) for COVID-19 Virus, 2020 . உலக சுகாதார நிறுவனம் இம்மொழிபெயர்ப்பில் உள்ள உள்ளடக்கப் பிழைகள் அல்லது துல்லியம் என்பவற்றிற்குப் பொறுப்புடையதற்றதாகும். மொழி பெயர்ப்பில் ஏதேனும் வித்தியாசங்கள் ஆங்கிலத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழில் காணப்பட்டால் ஆங்கில மூலப் பிரதியில் காணப்படுபவையே சரியானவையாக ஏற்றுக்கொள்ப்படும்.
Course contents- மொடியூல் 1: ஆயத்த நிலையில் இருத்தல்இ தயார் படுத்துதல் மற்றும் கிருமித் தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு. : இப்பாட நெறியானது ஆயத்த நிலையில் இருத்தல், தயார் படுத்துதல் மற்றும் கிருமித் தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்குகின்றது.
- மொடியூல் 2: கொவிட் - 19 வைரசு.: இப்பாட நெறியானது கொவிட்-19 இற்கான அறிமுகத்தினை வழங்குகின்றது.
- மொடியூல் 3: கொவிட் -19 இன் போது கிருமித்தொற்றிற்கான முற்காப்பு மற்றும் கட்டுப்பாடு ஜIPCஸ: தரநிலைப்படுத்தப்பட்ட முற்காப்புஇ பரவும் முறையினை ஆதாரமாகக் கொண்ட முற்காப்பு முறைகள் மற்றும் கொவிட் - 19 இற்கு உரித்தான பரிந்துரைகள்;.
Related Courses
Perioperative Medicine in ActionUniversity College London via FutureLearn Tackling Antimicrobial Resistance: A Social Science Approach
Imperial College London via FutureLearn Vaccines and COVID-19 Teach-Out
University of Michigan via Coursera COVID-19: Tackling the Novel Coronavirus
London School of Hygiene & Tropical Medicine via FutureLearn Science Matters: Let's Talk About COVID-19
Imperial College London via Coursera